க.குணராசா, பிரியா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
292 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ.
ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பகுதி 1-இல் பூமியின் பொதுவியல்புகள், பூமியின் தன்மை, புவிக்கோளம் ஆகிய பாடங்களும், பகுதி 2-இல் இலங்கை, இலங்கையின் நிலையம், இலங்கையின் பிறப்பும் தோற்றமும், இலங்கையின் பௌதிகவியல்புகள், இலங்கையின் மண்வகைகள், இலங்கையின் காலநிலை, இலங்கையின் காலநிலைப் பிரதேசங்கள், இலங்கையின் இயற்கைத் தாவரம், இலங்கையின் பயிர்ச்செய்கை, இலங்கையின் கனியங்கள், இலங்கையின் கைத்தொழில்கள், இலங்கையின் மீன்பிடித் தொழில், இலங்கையின் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள், இலங்கையின் சூழற் பிரச்சினைகள், சூழற் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி 3-இல் உலகின் பௌதீகவியல்புகள், உலகின் பௌதீக உறுப்புகள், பாறைகளும் மண்ணும், வானிலையும் காலநிலையும், உலகின் காலநிலைப் பிரதேசங்கள், உலகின் இயற்கைத் தாவரம் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி 4-இல் உலகின் சனத்தொகை, மனித வளம், உலகின் குடிப்பரம்பல், இலங்கையின் குடித்தொகை ஆகிய பாடங்களும், பகுதி 5-இல் உலகின் பொருளாதார நடவடிக்கைகள், உலகின் பயிர்ச்செய்கை, உலக மீன்பிடித் தொழில், உலகின் காட்டுத் தொழில்கள், உலகின் வலுப்பொருட்களும் கனிப் பொருட்களும், உலகின் கைத்தொழில்கள், உலக வர்த்தகம், போக்குவரத்தும் தொடர்பாடலும் ஆகிய பாடங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18365).