P.அம்பிகைபாகன். கொழும்பு 13: P.அம்பிகைபாகன், 125/6, 16ஆவது ஒழுங்கை, கல்லூரி வீதி, 2வது பதிப்பு, பெப்ரவரி 2000, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195 ஆட்டுப்பட்டித் தெரு).
348 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 26×20 சமீ.
1995ம் ஆண்டு முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறைகளை நீக்கி, புதிய முறைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 10 வயது மாணவனின் உள ஆற்றலையும் நுண்ணறிவையும் பாட அவதானத்தையும் சரியாக மதிப்பிட உகந்த இப்பரீட்சைக்கான 2000 பயிற்சி வினாக்களை இந்நூல் கொண்டுள்ளது. 1996-1999 காலப்பகுதியில் ஆசிரியர் வெளியிட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களிலிருந்து தேர்ந்த கேள்விகளாக இவை தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.