பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மார்ச் 2010. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).
40 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 142.50, அளவு: 29×21.5 சமீ., ISBN: 978-955-1779-34-4.
சிந்தனைவட்டம் அகில இலங்கை ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக ஆண்டுதோறும் நடாத்தும் தபால்மூலப் பாடநெறியில் மாணவர்களுக்கு வழங்கும் நூற்றொடரின் தரம் 5 பாடப்பரப்பைத் தழுவிய முதல் நூல் இது. வன்னி நிவாரணக் கிராமங்களில் உள்ள தரம் 5 மாணவர்களுக்கும், நிவாரணக் கிராமங்களிலிருந்து மீளக் குடியமர்த்தப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கும் கல்வி நிவாரண உதவியாகவும் இந்நூல் லண்டன், தேசம்நெற். அமைப்பினரின் நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நூலில் பரீட்சை வினாத்தாள் 01, 02 இல் இடம்பெறக்கூடிய கணிதம் சார்பான வினாக்களும் மாணவர்கள் விடையெழுதக்கூடிய வகையில் எளிமையான குறிப்புகளும், வழிகாட்டல் பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. உடத்தலவின்ன சிந்தனை வட்டம் தனது 313ஆவது வெளியீடாக இந்நூலை வெளியிட்டுள்ளது.