7015 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் : தொகுதி 2.

கே.ஆர். சுகுமார். (இயற்பெயர்: இராசையா சுகுமார்). யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 178 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-955-50192-0-0.

இலங்கை அரசினால் 2006ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திட்டத்திற்கான முதலாவது பரீட்சை 2007ம் ஆண்டில் நடைபெறவிருந்த நிலையில், அப்பாடத்திட்டத்தின்  ஏழு அலகுகளில் மூன்றாம், நான்காம் அலகுகளை உள்ளடக்கி எழுதப்பட்ட உப பாடநூல் இது. தமிழ்மொழியில் இப்பாடத்தைக் கற்க உதவியாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் பாடத்திட்டத்தில் உள்ள ஏழு அலகுகளில் முதலிரண்டு அலகுகள் பற்றி ஏற்கெனவே ஒரு நூலை வெளியிட்டுள்ள சுகுமார் தற்போது மூன்றாம் நான்காம் அலகுகள் பற்றிய விளக்கத்தை பல்வேறு அட்டவணைகள், விளக்கப்படங்கள் போன்றவற்றின் துணையுடன் இந்நூலில் விளக்கியிருக்கின்றார். முதல் 138 பக்கங்களில் பாட விளக்கமும், 138-178 வரையிலான பின்னடிப் பக்கங்களில் விடயத் தலைப்புகளின்கீழ் மாதிரி வினாக்களும் தரப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர்  கொக்குவில் இந்துக் கல்லூரியின் கணனிப்பிரிவுக்கான ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41083).

ஏனைய பதிவுகள்

16154 புலோலி பர்வதவர்த்தனிசமேத பசுபதீஸ்வரர் இலக்கியத் தொகுப்பு மற்றும் சமயம் சார்ந்த சில பொருள்களின் சுருக்கமான திரட்டு.

 வி.வேல்முருகு, பார்வதி சுரேஷ்குமார், தி.நாகராசா. யாழ்ப்பாணம்: புலோலி பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 487 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22.5 சமீ.