7016 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்: தொகுதி 3.

கே.ஆர். சுகுமார். (இயற்பெயர்: இராசையா சுகுமார்). யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xi, 173 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 23.5×18.5 சமீ., ISBN: 978-955-50192-4-8.

வரலாற்றுத் தகவலாக அரைநூற்றாண்டு கால கணினி மொழிபற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் காட்சி அடிப்படைகள், மாறிகள் எனத் தொடர்ந்து தினமும் பலரும் பயன்படுத்தும் இணையத்தளம், கணினி மொழி பற்றிய தகவல்களையும் தந்துள்ளார். இந்நூலாசிரியரால் எழுதப்பட்ட முதலிரு நூல்களும் நான்கு அலகுகளை உள்ளடக்கியுள்ளன. மூன்றாவது நூலில் 5,6,7,8ம் அலகுகள் பிரிக்கப்பட்டு விடயங்கள் தரப்பட்டுள்ளன. அலகு 5-நிகழ்ச்சி நிரலாக்க எண்ணக்கரு,  கணினி மொழிகளின் அறிமுகம், நெறிமுறை, தொழில்நுட்பம், தரவு வகைகள், தொழிற்பாடு பயிற்சிகள் என்பனவும், அலகு 6இல் இணையத்தள அபிவிருத்தி, உருவாக்குதல், இணைத்தல், கிராபிக் வடிவங்கள்,  இணையத்தளத்தை வெளிப்படுத்துவதற்கான தேவைகள் என்பன அடங்குகின்றன. அலகு 7இல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் சமூகமும் தேசிய அபிவிருத்தியும் சுகாதாரமும், கல்வி, விவசாயம், கைத்தொழிற்சாலைகள், உட்பட பாவனை தொடர்பான பிரச்சினைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. அலகு 8இல் குழு செயற்றிட்டம், முன்மாதிரி வினாக்கள் என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர்  கொக்குவில் இந்துக் கல்லூரியின் கணனிப்பிரிவுக்கான ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42748).

ஏனைய பதிவுகள்

11225 திருக்கோணமாமலை பத்திரகாளி அம்மன் பதிகம்-கலிவெண்பா.

சி.ஆ.கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: சி.ஆ.கந்தையா வெளியீடு, 12 ஏ, முதலாம் சப்பல் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1974. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு). 18 பக்கம்,

Versatility Ports Local casino Opinion 2024

Posts Versatility Ports Gambling establishment Cellular and you will App Player’s withdrawal is rejected. Support service inside Liberty Ports Gambling establishment User believes one to