என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 506 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 15., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-307-5.
தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் ஏழாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 6001-7000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். நூலின் பின்னிணைப்பாக ‘இலங்கைத் தமிழ் ஆவணங்கள்: ஆவணப்படுத்ததல்-வரலாறு-அதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக துணை நூலகர் இராசையா மகேஸ்வரன் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தேசிய நூற்பட்டியலையும், நூல்தேட்டம் தொகுப்புகளையும் ஒப்பீடுசெய்யும் இவ்வாய்வு, தமிழகத்தில் 2010இல் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் மீள்பிரசுரமாகும்.