அ.ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
200 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1857-82-0.
ஒரு நூலக உருவாக்கத்திற்குத் தேவைப்படும் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும், உதாரண விளக்கங்களுடனும் புகைப்படத் தகவல்களுடனும் இந்நூல் முன்வைக்கின்றது. வீட்டு நூலகம் முதற்கொண்டு, சனசமூக நிலைய நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், மற்றும் கல்வி நிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத்தர இந்நூல் முயல்கின்றது. நூலகம், நூல்கள், வாசகர், அலுவலர் ஆகிய நான்கு பெரும்பிரிவுகளுக்குள் அடங்கிய பல்வேறு உபதலைப்புகளுடன் இந்நூல் விரிகின்றது.