7023 தகவல்வள முகாமைத்துவம்.

அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).

x, 403 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-160-6.

தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு நூலகமும் தரமான சேகரிப்பைக் கொண்டிருக்கவேண்டும் என்ற தீராத விருப்பில் உருவாக்கம் பெற்றதே இந்நூலாகும். தகவல் வளங்களின் தெரிவு, ஈட்டல், நீக்கம், ஆகியவை உள்ளிட்ட அபிவிருத்தி என்ற கருத்துநிலையையும் பாதுகாப்பு என்ற அம்சத்தை முக்கியமாகக் கொண்ட பராமரிப்பு என்ற கருத்துநிலையையும் முக்கிய மூலக்கூறுகளாகக்கொண்டு இப்படைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. தகவல்தொழில்நுட்ப யுகமொன்றில் தமது அர்த்தத்தை இழந்துவரும் நூல் மற்றும் நூலகங்கள் என்ற கருத்துநிலைகளுக்குப் பதிலாக முறையே தகவல் வளங்கள் (Resources), தகவல் முறைமைகள் என்ற கருத்துநிலைகளின்கீழ் ஒவ்வொரு நூலகங்களும் கொண்டிருக்கவேண்டிய நூல்கள் மற்றும் நூலுருவற்ற சாதனங்கள், அவற்றின் தெரிவு, ஈட்டல், நீக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு இவற்றுடன் தொடர்புடைய முக்கிய அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் கல்விசார் நூலகராக பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Kostenloses Angeschlossen

Content Welches Soll Ich Klappen, Um As part of Solitaire Hinter Gewinnen? Finde Dich Das gelbe vom ei Unter Rtlspiele Zurecht: So Findest Respons Präzise