நீ.மரியசேவியர் (பிரதம ஆசிரியர்), கி.செல்மர் எமில் (பொறுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மாட்டின் வீதி).
252 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 28×21 சமீ.
சமயம், அரசியல் இரண்டும் அற்ற கலை இலக்கிய இதழாகத் தன் இருபதாண்டுப் பயணத்தின் ஒரு படிக்கல்லாக இந்தச் சிறப்பிதழ் அமைந்துள்ளது. கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் மற்றும் நூல் மதிப்பீடுகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி ஐம்பதாவது இதழ் (கலை 21 முகம் 01) வெளிவந்துள்ளது. காலத்தை வென்ற நவயதார்த்த சினிமா சித்தாந்தம் (பு.வு.கேதாரநாதன்),அங்குமிங்குமாய் இணையும் கதைகள் (அ.யேசுராசா), கத்தோலிக்கர்களின் மரணவீடுகளில் பாடப்படும் ஒப்பாரி இலக்கியங்கள் (கலையார்வன்), ஓவியர் வான்கோ: இறந்த பின்பும் வாழும் கலைஞன் (கோ.கயிலாசநாதன்), இருப்பெனும் புதிர்: மு.பொன்னம்பலத்தின் மதிப்பீடு கவிதை தொடர்பான சில கருத்துக்கள் (இ.ஜீவகாருண்யன்), கடந்த அரை நூற்றாண்டின் கவிதைத் தூறல்கள்: மேலோட்டமான ஓர் உலக வலம் (நீ.மரியசேவியர்), அழகியற் கல்வியில் சித்திரக் கலையின் வளர்நிலை- ஒரு நோக்கு (பப்சி மரியதாசன்), ஈழத்துப் பெண்கள் இலக்கிய வரலாறு-ஆரம்ப நிலைப்பட்ட குறிப்புகள் (செ.யோகராசா), கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளி லியோ டோல்ஸ்டோய் (K.S.சிவகுமாரன்), அவதார்: கனவில் உறையும் உலகம் (பீ.சே.கலீஸ்), வல்லினமும் மெல்லினமும் அவ(த்)தார் (N.M.S.), சிதம்பர நினைவுகள் (இராகவன்), ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள் (ஈ.குமரன்), தோற் கருவிகளின் தாய் – பறை (இ.ஜெயகாந்தன்), ஈரானிய வுறழ றுழஅநn சினிமாவில் எமக்கு நெருக்கமான பெண்ணிய அனுபவம் (பு.வு.கேதாரநாதன்), அறிதல்-ஆவணப்படுத்துதல்-சேகரித்தல்-பாதுகாத்தல்-காலத்தின் முதன்மையான பணி (மா.அருள் சந்திரன்), கட்டும் கடப்பும் கலைகளும் (இரவிச்சந்திரன்), தமிழிலக்கியப் புலத்தில் முருகையனின் ஆளுமையும் புலமைத்துவமும் (சி.ரமேஷ்), தெருவெளி அரங்கு (அ.சத்தியானந்தம்), ஈழத்து கூத்து நூற்பதிப்புகள் (யோ.யோண்சன் ராஜ்குமார்), யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே இலக்கியவழிப்பட்ட ஒரு குறிப்பு (கருணாகரன்), இணையம்: அளவுகளையும் தாமதங்களையும் அகற்றிய கட்டுப்பாடற்ற வெளி (தீபச்செல்வன்), தமிழின் செம்மொழித் தகுதி-அறிஞர்களின் கருத்துகள் (தமிழ்நேசன்), ஊடகங்களில் மகிழ்நெறி (ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்தன்), திருமறைக் கலாமன்றத்தின் 45 வருட அரங்கியல் பயணம்: தடங்களும் தடயங்களும் (ஸ்நாபகன்) ஆகிய கட்டுரைகள் வழமையான சிறுகதை, கவிதை போன்ற ஆக்க இலக்கியங்களுடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.