காவலூர் இ.விஜேந்திரன். கொழும்பு: இரா-வின் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 12: Perfect பதிப்பகம், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
x, 222 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-51228-5-6.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரியான இ.விஜேந்திரன், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். மனித நேயம் மற்றும் வினைத்திறன் மிக்க பாடசாலை ஊடக கலாச்சாரம் என்ற தொனிப்பொருளில் இலங்கைப் பாடசாலைகளிலும் ஊடக கலாச்சாரம் ஒன்றை ஏற்படுத்த கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றான தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் என்ற பாடத்திட்டத்திற்கான ஊடகக் கல்வியை அங்கு இவர் போதித்து வருகிறார். ஊடகவியல்துறை பற்றிய இந்த நூல் இதழியல், செய்தி, தொடரறா ஊடகம் (இணைய இதழியல்) பிராந்திய வானொலி, விளம்பர இதழியல், சிறுவர் இதழியல், மக்கள் தொடர்பு, ஊடக சுதந்திரம், பத்திரிகைப் பேரவைச் சட்டம், தொடர்பு சாதனங்களும் உளவியல் மாற்றமும், ஊடகத்துறைக்கு உரமிட்டோரும் உரமானோரும், ஊடகத்துறையில் விருதுபெற்றோர் ஆகிய பன்னிரு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 178357).