7040 இந்திய மெய்யியற் சிந்தனையில் வேதாந்தம்-சித்தாந்தம் கூறும் கடவுட்கொள்கை: ஓர் ஒப்பியல் ஆய்வு.

கலைவாணி இராமநாதன். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சிற்றம்பலம் V கார்டினர் மாவத்தை, இணை வெளியீடு: கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).

xvi, 252 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-247-4.

கடவுட் கொள்கை என்பது தனிமனித நம்பிக்கையுடன் தொடர்புபட்ட விடயமாகும். காட்சிக்குப் புலனாகாத பேருண்மைகள் சில விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட போதிலும், பல விடயங்கள் இன்றும் நம்பிக்கையின் வழியாக வாழ்ந்துவருவது கண்கூடு. கடவுட்கொள்கை தொடர்பான கருத்துக்கள் ஆய்விற்கு அப்பாலும் செல்கின்ற உண்மைகள் என்பது எவருக்கும் எளிதிற் புலனாகும்.  இந்நிலையில் அறியமுடியாத ஓர் உட்பொருளை இந்து தத்துவங்களான வேதாந்தமும் சித்தாந்தமும் எவ்வாறு அறிவிக்க முயன்றுள்ளன என்பதனை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக அமைந்துள்ள இந்நூல் இந்திய தத்துவத்திற் கடவுட் கொள்கை, அத்வைத வேதாந்தம்- கடவுட் கொள்கை, சைவசித்தாந்தம்- கடவுட் கொள்கை, கடவுட் கொள்கை பற்றிய ஒப்பியல் ஆய்வு: அத்வைத வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகிய நான்கு இயல்களில் விரிகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்