7051 பியாஜேயும் அறிகை உளவியலும்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: இ.இரத்தினகோபால், செயலாளர், பாலர் கல்விக்கழகம், 49/5 யாழ். வீதி,  1வது பதிப்பு, மே 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

(6), 28 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18.5×12 சமீ.

Piaget and the Psychology of Cognition என்ற ஆங்கில உபதலைப்புடன் வெளியாகியுள்ள இந்நூல்,  யாழ். பாலர் கல்விக்கழகத்தின் இரண்டாவது வெளியீடாகும். குழந்தை உளவியல் பற்றிய மேற்குலக அறிஞர்களது கருத்துக்களையும் ஆராய்ச்சிகளையும் ஆசிரியர்கள் அறிவதன் மூலம் நமது மண்ணின் குழந்தைகளின் உளவியல் சம்பந்தமான ஆய்வினையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு எந்த அளவு தூரம் மேலைநாட்டறிஞர்களின் கருத்துக்கள் எமது நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்புடையனவாக உள்ளன என்பதனைக் கண்டறியவும், புதிய கருத்துக்கள் உள்வாங்கப்படவும் இந்நூல் வழிகாட்டியாக அமைகின்றது. பிரெஞ்சு அறிஞரான பியாஜே அவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது உளவியல் தத்துவம் என்ற பொருளில் லண்டன் பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றினார். அந்நிகழ்வுக்குத் தலைமைவகித்த  ஒப்பீட்டுக் கல்விப் பேராசிரியர் ஜோசப் லோறைஸ் ஒரு மணித்தியாலத்தில் அவரது உரையின் சாராம்சத்தை ஆங்கிலத்தில் வழங்கினார். அவ்வுரையில் அறிகை உளவியல் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அக்கருத்துக்களைக் கோவைப்படுத்தி கலாநிதி ஜெயராஜா அவர்கள் இவ்விமர்சனக் கட்டுரையை எழுதியுள்ளார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93657).

ஏனைய பதிவுகள்

Starburst Free Spins 2023

Grootte Slot lucky haunter | 3, Watje Vermag Ik Verkrijgen Over Free Spins? Spullen Mag Ik Passen Erbij Voor Spins? Liefste Online Casinos Diegene Kloosterzuster