வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா (ஆங்கில மூலம்), ஜே.ஜி.எட்வேர்ட் பீரிஸ் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வசந்தி தேவராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 12: யுனைட்டெட் பிரின்ட்).
(3), 194 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.
மூல நூலாசிரியர் கலாநிதி வசந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மனித நடத்தை தொடர்பாக மே 2004இல் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இதுவாகும். மனித நடத்தைகளுக்கு அடி அத்திவாரமாக விளங்கும் அடிப்படை உண்மைகளை இலகுவான நடையில் இந்நூல் விபரிக்கின்றது. தாம் யார் என்ற கேள்விக்கு விடைகாணலிலும், தமது நடத்தையைச் சுய உணர்வுடன் கட்டுப்படுத்துவதிலும் மக்கள் முயற்சித்தால் பின்னாளில் ஏற்படக்கூடிய மனநோய்களிலிருந்தும் வெகுவாக விடுபடலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. சுயம் குறித்த எண்ணக்கரு மற்றும் சுய கௌரவம், உணர்ச்சிகளும் நடத்தையும், நல்லது நோக்கிய மாற்றம், தொடர்பாடல், துன்பம்-சாவு-மற்றும் மரணித்தல், தியானம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 162775).