7072 அளவையியலில் அளவாக்கம்சார் அனுமானம் (பயனிலைத் தருக்கம்).

கந்தசாமி அன்ரன் டயஸ். யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, (3), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அளவுபடுத்தற் கோட்பாடு-பயனிலைத் தருக்கம், வாதங்களை மதிப்பீடு செய்தல், பெறுகை முறை-நியம நிரூபணமுறை, பாரம்பரிய உய்த்தறி அளவையியலும் அளவுபடுத்தற் கோட்பாடும் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் அன்ரன் டயஸ்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை விரிவுரையாளராவார். இதுவரையில் பெரும்பாலும் வெளிவந்த அளவையியல் நூல்கள் அளவையியலின் ஒரு பிரிவான எடுப்பளவையியல் தொடர்பாகவே வெளிவந்துள்ள நிலையில் ஆசிரியரின் இந்நூல் அளவாக்கம்சார் அனுமானம் பற்றியதாக வெளிவந்திருக்கிறது.  க.பொ.த.உயர்தரத் தேர்விலும், பல்கலைக்கழக கலைத் தேர்வுகளிலும் அளவாக்கம்சார் அனுமானம் பற்றிய அறிமுகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்நூல் மாணவர்களுக்கு முக்கியமானதாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 174796).

ஏனைய பதிவுகள்

8640 வாழ்தல் என்பது: சிறுகதைத் தொகுதி.

திருக்கோவில் கவியுவன். (இயற்பெயர்: இராசையா யுவேந்திரா).மொரட்டுவை: நண்பர்கள், 103, மேபிள் வீதி,  1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6 ஜயவர்தன அவென்யு). (5), 105 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

13925 என் வழி தனிவழி அல்ல.

வி.ரி.இளங்கோவன். மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3, A-பிளாக், R.S.L. கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலை, விளாங்குடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (மதுரை 625 002: மதுரை ஆர்ட்ஸ் அன்ட் ஸ்கிரீன்ஸ்,