8640 வாழ்தல் என்பது: சிறுகதைத் தொகுதி.

திருக்கோவில் கவியுவன். (இயற்பெயர்: இராசையா யுவேந்திரா).மொரட்டுவை: நண்பர்கள், 103, மேபிள் வீதி,  1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6 ஜயவர்தன அவென்யு).

(5), 105 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட  கவியுவனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. சரிநிகர் பத்திரிகையில் வெளியாகிய மரணத்தின் தூது (ஏப்ரல் 1995), உடைத்துப்போட்ட தெருவிளக்கு (ஜுலை 1994), மதிப்பீடு (செப்டெம்பர் 1994), நனைதலும் காய்தலும் (நவம்பர் 1994), செவ்வந்தி (ஏப்ரல் 1995), இனியும் ஒரு சாவு (பெப்ரவரி 1995), வாழ்தல் என்பது (ஓகஸ்ட் 1995), காற்று கனக்கும் தீவு (ஜனவரி 1996) ஆகிய சிறுகதைகளுடன் வீரகேசரி பத்திரிகையில் வெளியான தொடுவான வெளிகள் (மே 1994), திரைகளுக்கு அப்பால் ஆகிய சிறுகதைகளையும் உள்ளடக்கி மொத்தம் 10 கதைகளுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இந்நூலுக்கு வழங்கிய விரிவான முன்னுரை கவியுவனின் சிறுகதை ஆளுமையை உயர்வாக மதிப்பிடுகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  120452).

ஏனைய பதிவுகள்