கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி இராமநாதன், இந்து நாகரீகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, தை 1998. (கொழும்பு 6: கார்த்திகேயன் (பிரைவேட்) லிமிட்டெட், 501/1, காலி வீதி).
(16), 114 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ.
சைவ சித்தாந்தம்: சுருக்கமான விளக்கம், சைவ சித்தாந்தத்தில் முப்பொருட் தத்துவம், சைவ சித்தாந்தத்தில் காட்சியளவை, திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம், அஷ்டப் பிரகரணமும் சைவ சித்தாந்தமும்-ஓர் அறிமுகம் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வேத பாரம்பரியமும் சைவசித்தாந்தமும், இந்து தர்மமும் வர்ணதர்மமும் ஆகிய இரு நூல்களையடுத்து ஆசிரியரின் மூன்றாவது நூல் இது. இந்நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையின் முதுநிலை விரிவுரையாளர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131076).