7086 சைவ சித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள்.

மு.கந்தையா. யாழ்ப்பாணம்: திருவாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).

xvi, (4), 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

12.09.1994 அன்று ஏழாலையூர் பண்டிதர் மு.கந்தையா அவர்களால் வழங்கப்பட்ட திருவாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையின் நூல்வடிவம் இது.  பெருமாட்டி லீலாவதியின் விருப்பத்துக்குரிய துறையாகிய சைவசித்தாந்தம் பற்றி அவரது மருமகன் நடேசபிள்ளையின் நெருங்கிய நட்புக்குரிய அறிஞரான பண்டிதர் மு.கந்தையா இவ்வுரையை ஆற்றியிருந்தார். தமிழகத்துக்கு நிகராக சைவசித்தாந்தத்தில் பாண்டித்தியம் பெற்ற யாழ்ப்பாணத்து மேதைகள் பற்றி இவ்வாய்வு விரிகின்றது. 1950இல் வெளிவந்த அச்சுவேலி திக்கம் செல்லையாவின் துகளறு போத உரை, அதற்கு முன்னர் நந்தன வருடம் வேலணை வி.கந்தப்பிள்ளையால் முதற்பதிப்பாக உரையுடன் வெளிவந்த தத்துவப் பிரகாச நூல் என்பன முக்கியமானவை. 16ம் நூற்றாண்டினரான திருநெல்வேலி  ஞானப்பிரகாசரின் வடமொழிச் சிவஞானபோத விருத்தி, தமிழ்ச் சிவஞான சித்தியாருரைகள் முதல் பின்னைய பண்டிதமணியின் அத்வைத சிந்தனை ஈறாக சைவசித்தாந்த நூல்கள் பற்றியும் அவற்றை யாத்த யாழ்ப்பாணத்தறிஞர் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124056).

ஏனைய பதிவுகள்

Book away from Ra Position Remark

Posts Easy methods to Winnings the publication out of Ra Games Willing to enjoy Publication of Ra for real? Ahead of 100 percent free revolves

Enjoy The newest Online slots Uk

Blogs Popular Slot Games Features – play Dracula Rtp slots See your own nearby Mecca Bingo Pub Buffalo King Megaways Very important Features of Finest