7089 சைவ ஞான விளக்கம்.

மு.கந்தையா. கொழும்பு: கொழும்புச் சிவத்திரு மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிறின்டர்ஸ், 55 டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை).

192 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ.

சைவநெறிமறந்து உலகியலில் ஊறி, உலோகாயத நெறியை விரும்பி பல்வேறு உலகச் சமயங்களையும் நாடும் எம்மவரை மயக்கம் நீங்கித் தூய சைவத்துக்குள் நெறிப்படுத்தும் நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் இந்நூலாசிரியர் அமரர் பண்டிதமணி மு.கந்தையா ஏழாலையைச் சேர்ந்தவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. சைவசித்தாந்தத்தில் மாயை உண்மை என்ற அவரது முன்னைய நூலிலுள்ள (நூல்தேட்டம் பதிவு 4073) கட்டுரைகளுடன் மேலும் பல கட்டுரைகளையும் சேர்த்து இப்புதிய நூல் வெளிவருகின்றது. சைவானுட்டானத்தின் ஞானப் பெறுமதி, சிவாலயச் சூழல் சிவமயமாகவேண்டும், கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் ஒழுங்கு உணர்வுருக்கம் நித்திய நைமித்தியத்திலும் இடம்பெறவேண்டும், சிவபூஜை மாந்தராத்துவமா? சைவ உண்மை விளக்கத்தில் திருமுறைகளின் பங்கு, சிவாகமங்களின் பெறுமானம், துர்க்கையும் இராஜராஜேஸ்வரியும், மண்ணில் நல்லவண்ணம் வாழலாம், சிவநந்தி அடிகளுக்கு ஒரு கடிதம், யாழ்.சைவப் பாரம்பரியத்தில், திருவிளங்கதேசிகர் உரைவளம், சைவர்கள் இந்துக்கள் அல்ல, சைவ உலகமே இந்துசமய வழக்கைக் கையாளத் தொடங்கியதால் விளைந்த விபரீதங்கள், இந்து சமயம் இரவல் வழக்காற் சைவத்துக்கு நேர்ந்த இழப்புகள், சைவசித்தாந்த ஆய்வு எல்லை, யதார்த்தமான சைவசித்தாந்தக் கருத்துகளுக்கு நாடவேண்டிய நூலாசிரியர்கள், வினையாற்றலின் தற்றுணிபு, மூலகன்மம், சைவசித்தாந்த சிந்தனை, சைவசித்தாந்தத்தில் மாயை உண்மை ஆகிய 20 கட்டுரைகள் இதில் உள்ளடங்குகின்றன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45861).

ஏனைய பதிவுகள்

Play Craps Games Online for real Profit 2024

Posts Get the very best cellular gambling establishment incentives | Wicked Jackpots casino Local casino Software Invited Incentives Jiliko Gambling establishment provides an intensive selection