7101 மதமாற்றம்: ஓர் ஒப்பியல் சமய ஆய்வு.

கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: கணபதி மகேசன், 6, ராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: சிவன் பப்ளிக்கேஷன்ஸ், நல்லூர்).

(4), 80 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×13.5 சமீ.

இது தமிழரின் சமகாலப் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஓர் ஒப்பியல் சமய நூலாகும். தூங்கிக் கிடக்கும் தமிழினத்தைத் தட்டி எழுப்பிச் சிந்திக்க வைப்பதே இதன் இலக்காகும். இது சைவ நெறியினைத் துறந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாற முற்படுவோருக்கும், மாறுவது பற்றிய தீர்மானத்தை எடுப்பதற்குத் தடுமாறும் அன்பர்களினதும் நலன் கருதி எழுதப்பட்டது. சைவத்திறன், கிறிஸ்தவ-இஸ்லாம் மதக் கொள்கை(படைப்பு, சமூக ஏற்றத்தாழ்வு, ஓய்வுநாள், உடலும் உயிரும், விளக்கம், பாவம்-புண்ணியம்-இரட்சிப்பு, கடவுளின் உருவம், ஒருமைவாதம்-எதிர் -பன்மைவாதம், இறையுரிமை, வரலாற்றுச் சமயங்கள், ஏசுவின் பிறப்பு-இறப்பு-உயிர்ப்பு, மிஷனரி இயக்கம், பேய்-பிசாசு-சைத்தான், இறையுணர்வு, சமய ஒற்றுமையும் ஆக்கிரமிப்பும், சந்தர்ப்பவாதம், அரசியல் வழிவந்த சமயப் பேரினவாதம் எழுச்சியும் வீழ்ச்சியும், அருளாட்சியும் மருளாட்சியும், இடைக்கால இறையரசு), மதம்-மொழி-பண்பாடு-1, இறங்குவரிசையும் மதமாற்றமும்-2, மதமாற்றம் வரலாறு (புத்தம்-சமணம், இஸ்லாம், ஐரோப்பியர் வருகை, கிறிஸ்தவம்-இன்றைய நிலை-றோமன் கத்தோலிக்கம், கிறிஸ்தவ சீர்திருத்த சேர்ச் சபைகள், தற்கால மதமாற்ற முயற்சிகள்), மதமாற்ற வலிகோலிகள் (பிராமணர், கிறீஸ்தவ நிறுவனங்களை ஆதரிக்கும் சைவக் கிறீஸ்தவர், மதச்சார்பற்ற இந்துமத நிறுவனங்கள், பாடசாலைக் கிறிஸ்தவ அமைப்புக்கள், சீருடை, சிலுவை அடையாளம், கிறிஸ்தவ பாடசாலைகளில் மாணவரைச் சேர்த்தல், சேர்ச் சிறுவர் பாடசாலை, தொழிற் கல்வி, மதச்சார்பு, சமரசம், யார் ஏன் மதம் மாறுகிறார்கள்?) ஆகிய தலைப்புகளிலும் (உபதலைப்பகளிலும்) இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124365).         

ஏனைய பதிவுகள்

Freebitcoin Games

Content Should i Score Bitcoin Incentives Whenever To play Plinko? – casino Tropicana Gold review How to Ranch Bitcoin? An educated Play Best Enjoy To