7121 ஞானவிளக்கு.

சிவ. மகாலிங்கம். கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (கனடா: விவேகா அச்சகம், ரொரன்டோ).

vi, 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13 சமீ.

விநாயகர் வழிபாடு, சக்தி வழிபாடு, முருக மந்திரம், வைரவர் வழிபாடு, திருமுறையில் சைவசித்தாந்தம், சித்தர்கள் கண்ட சமயநெறி, திருமந்திரத்தில் சைவம், சைவத்தின் காவலர், இதயத்தை புனிதமாக்கும் எங்கள் சமயம் ஆகிய ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் குப்பிளானில் பிறந்தவர். ஆசிரியராகவும், பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும், உப அதிபராகவும் பணியாற்றியவர். இன்று சமயப் பேச்சாளராக அறியப்பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47308).

ஏனைய பதிவுகள்