ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்). சிதம்பரம்: ஜீ.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 12வது பதிப்பு, இரக்தாட்சி வருடம், 1924, 1வது பதிப்பு குறிப்பிடப்படவில்லை. (சென்னை 1: ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலனயந்திரசாலை, 300 தங்க சாலைத்தெரு).
38 பக்கம், விலை: காசு 30., அளவு: 15×12 சமீ.
ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்துப் பதிப்பித்து வெளியிட்ட இத் திருப்பாடற்றிரட்டில், பட்டணத்துப் பிள்ளையார் அருளிய கோயிற்றிருவகவல், கச்சித் திருவகவல், திருவெகம்பமாலை, திருத்தில்லை, திருச்செங்காடு, திருவொற்றியூர், திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி, கைலாயம், மதுரை, மற்றும் தன் தாயாருக்குத் தகனக்கிரியை செய்கையில் பாடிய வெண்பா என்பன தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.