7134 ஈழத்துத் திருக்கோயில்கள் வரலாறும் மரபும் பகுதி 2.

வசந்தா நடராசன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: பி.வி.ஆர். ஆப்செட்).

xviii, 194 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 18×12 சமீ.

கனடாவிலிருந்து வசந்தம் வெளியீடாக ஈழத்தின் 24 கோவில்களின் வரலாற்று மரபு தனித்தனி இயல்களாகப் பதிவுசெய்யப்பட்டு, இந்நூலின் முதலாம் பாகம் 2003ம் ஆண்டு வெளிவந்திருந்தது. (பார்க்க: நூல்தேட்டம் 2149). இவ்விரண்டாம் பாகத்தில் மேலும் 16 கோவில்களின் விபரங்கள் விரிவாகத் தனித்தனி இயல்களாகத் தரப்பட்டுள்ளன. அவ்வகையில், கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம் (புங்குடுதீவு, யாழ்ப்பாண மாவட்டம்), பெரியபுலம் சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் (அனலைதீவு, யாழ்ப்பாணம்), மாணிக்கப்பிள்ளையார் கோவில் (அட்டன், மலையகம்), கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் கோவில் (மட்டக்களப்பு), பள்ளிக் குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம் (மூதூர், திருக்கோணமலை), சம்பில்துறை சம்புநாதேஸ்வரர் சிவாலயம் (சுழிபுரம், யாழ்ப்பாணம்), கந்தளாய் சிவன் கோவில் (திருக்கோணமலை), முத்துமாரி அம்பாள் ஆலயம் (திருநெல்வேலி, யாழ்ப்பாணம்), இணுவில் சிவகாமி அம்மை ஆலயம் (யாழ்ப்பாணம்), பண்டாரபுலம் மனோன்மணி அம்பாள் ஆலயம் (யாழ்ப்பாணம்), சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம் (திருக்கோணமலை), ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம் (வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்), உகந்தைமலை முருகன் கோயில் (மட்டக்களப்பு), தேவபுரம் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் (சரவணை, யாழ்ப்பாணம்), சந்திரசேகர வீரபத்திரசுவாமி கோவில் (உடுப்பிட்டி), தெகிவளை ஆஞ்சநேயர் ஆலயம் (கொழும்பு) ஆகிய 16 திருத்தலங்களின் மகிமை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்நூல் பதிவுசெய்கின்றது.

ஏனைய பதிவுகள்

Recursos Especiais Acimade 50 Dragons

Content What Are The Graphics And Sound Effects Like In 5 Dragons? Acercade Dragon Hero Slot Como Barulho Melhor Horário Para Aprestar Dragon Hatch? Apontamento