7158 முஸ்லிமாக வாழ்வது எவ்வாறு? 

உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கம் (லிபிய மூலம்), அஷ்ஷெய்க் ரஊப் சைன் (தமிழாக்கம்), A.R.M.மஹ்ரூப் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: உலக இஸ்லாமிய அழைப்பு இயக்க கொழும்புக் கிளை, இல.4, கேம்பிரிட்ஜ் பிளேஸ், 1வது பதிப்பு, 2006. (தெகிவளை: கிரசென்ட் பப்ளிக்கேஷன்ஸ், 156, ஆஸ்பத்திரி வீதி).

38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.

உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கம் என்பது அரச சார்பற்ற சர்வதேச நிறுவனமாகும். 1972இல் லிபியத் தலைநகர் திரிப்பொலியில் ஸ்தாபிக்கப்பட்டது. இஸ்லாமிய போதனைகளான அன்பு, சமாதானம், ஒத்துழைப்பு, நீதி, சுதந்திரம் போன்ற பண்புகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக இவ்வமைப்பு உழைக்கின்றது. சமூகங்களுக்கிடையில் சகிப்புத்தன்மையுடன் கூடிய நல்லுறவினை வளர்த்தெடுக்கவும் இது உதவுகின்றது. இலங்கை முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 1989இல் கொழும்பில் இதன் கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. அறபு மொழி வளர்ச்சிக்கு உதவுவது, புலமைப்பரிசில்கள் வழங்குவது, அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உதவுவது என்பன இவ்வமைப்பின் மேலதிக பணிகளாயுள்ளன. இந்நூல் இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறார்களுக்கு தொழுகை பற்றிய விடயங்களை இலகுவாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 617983).

ஏனைய பதிவுகள்