எஸ். ஹூசைன் மௌலானா (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை ஸப்வான் (பதிப்பாசிரியர்). வெலிகமை: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 163, கப்புவத்தை, டெம்பிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (வெலிகம: Quranic Guidance (Imam Mohamed Al-Asi)).
(4), 92 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ.
கருத்து முரண்பாடே அறிவின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தைக் கருத்தில் இருத்தி எஸ். ஹூசைன் மௌலானா அவர்களால் தாபிக்கப்பட்ட அமைப்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனமாகும். சர்வதேச அரசியல், சமூகப்பிரச்சினைகளையிட்ட கருத்துரைகளும் அதற்கான வாதப்பிரதிவாதங்களுமாக முதல் இரண்டு நூல்களை வெளியிட்ட நிலையில் மூன்றாவது தொகுதியாக கருத்துக் கண்ணோட்டம் மூன்றாவது பாகம் வெளிவருகின்றது. ஸியோனிசத்தின் நிஜமான எதிரி யார் என்ற கேள்வியுடன் இந்நூல் விரிகின்றது. இந்நூலில் பதிப்புரை (திக்குவல்லை ஸப்வான்), ஒரு கடிதம் (A.H.M. யூஸூப்), மேற்குலகமும் மத்திய கிழக்கும் (அல்ஹாஜ் A.M.முஸ்தபா), பழமையின் சிறப்பு-கவிதை (செய்யிதா ஹ_ஸ்னா), முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள் (ஹணா மணாளன்), வாதம் 1 (A.H.M.யூஸூப்), பிரதிவாதம் 1 (S.M.N.மர்சூம் மௌலானா), அன்றும் இன்றும் ஒன்றே (மொஹமட் உஸ்பர்), வாதம் 2 (ஜனாபா ருஸ்கா ரிப்கான்), பிரதிவாதம் 2 (எஸ். ஹூசைன் மௌலானா), Quranic Guidance (Imam Mohamed Al-Asi) ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் அடங்குகின்றது.