செ.கிருஷ்ணராஜா, ப.கணேசலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 209 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-293-1.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள்மீது இந்தியர்கள் வர்த்தக-வாணிப உறவுகளை ஏற்படுத்திப் பின்னர் தமது சமய நெறியான இந்து மத முறைகளையும் அங்கு புகுத்தி அப்பிராந்தியத்து மக்களுடன் பண்பாட்டு அடிப்படையில் ஒன்றுகலந்திருந்தனர். இதன் விளைவாக அந்நாடுகளில் இந்துப் பண்பாட்டின் செல்வாக்கு ஏற்பட்டது. தென்கிழக்காசியாவில் நிலவிய இந்துப் பண்பாட்டை இந்நூல் விரிவாகப் பதிவுசெய்கின்றது. தென்கிழக்காசியா: ஓர் அறிமுகம் (சாந்தினி அருளானந்தம்), இந்திய தென்கிழக்காசிய தொடர்புகளும் இந்துப் பண்பாடு பற்றிய சில பிரச்சினைகளும்: ஒரு வரலாற்றுக் குறிப்பு (செ.கிருஷ்ணராஜா), காலத்தினை வென்றுநிற்கும் சமயம் (எஸ்.எஸ்.சர்மா), தென்கிழக்காசியாவில் இந்துசமயம் இந்து சமயப் பரம்பல்-அன்றும் இன்றும் (ப.கணேசலிங்கம்), தென்கிழக்காசிய நாடுகளில் சைவசமயம் (ப.கணேசலிங்கம்), தென்கிழக்காசிய நாடுகளில் இந்துக் கோயில்கள் (ப.கணேசலிங்கம்), சம்பா நாட்டில் இந்துப்பண்பாடு (சி.தில்லைநாதன்), தென்-தென்கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாட்டு மரபும் தொன்மையும் (செ.கிருஷ்ணராஜா), தென்கிழக்காசிய நாடுகளில் விநாயக வழிபாடு (ப.கணேசலிங்கம்), தென்கிழக்காசியாவில் இந்து கட்டிட சிற்பக்கலை மரபுகள் (செ.கிருண்ணராஜா) ஆகிய கட்டுரைகளும், பின்னிணைப்பாக தென்கிழக்காசியாவில் பௌத்தம் (சாந்தினி அருளானந்தம்), தென்கிழக்காசியாவில் பௌத்த கட்டிடக் கலை மரபு (செ.கிருஷ்ணராஜா) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.