மு.திருநாவுக்கரசு. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, இணைந்து வெளியிடுவோர், லண்டன்: தமிழியல், 2வது பதிப்பு, மே 2009, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (சென்னை 600029: மைக்ரோ பிரின்ட்ஸ் லிமிட்டெட்).
170 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-89945-49-7.
அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் சதையுமாகப் பார்க்க முயற்சிக்கிறது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்குவெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப்போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்திரிக்க விரும்புவது மட்டுமின்றி அதன் அனைத்து உள்ளோட்டங்களையும் பார்க்க முனைகின்றது. தத்துவத்தையும் நடைமுறையையும் சீர்தூக்கிப் பார்க்க விரும்பும் இவ்வாய்வு உலகளாவிய ரீதியில் கற்பனைகளைக் கடந்து, யதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்ட முயற்சிக்கின்றது. மேற்குலக ஆதிக்க வரலாற்றை முழுநீளப் போக்காகச் சித்திரிக்க முனையும் இவ்வாய்வு, அந்த மேற்குலகின் ஆதிக்கத்திற்கிடையே ஒரு முனையில் பின் லாடனையும் மறுமுனையில் பிடல் காஸ்ட்ரோவையும் இரு அந்தங்களாக்கி ஆய்வுசெய்கின்றது. இதில் பின் லாடன் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களையும், தொடர்ந்து அரை நூற்றாண்டுக்காலமாக அமெரிக்காவால் பிடல் காஸ்ட்ரோவைத் தோற்கடிக்க முடியாதுள்ளமைக்கான காரணங்களையும் கண்டறிய விளைகின்றது. மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்று அப்பல்கலைக்கழகத்தில் சிலகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை என்ற முக்கிய நூலையும், வேறு சமகால அரசியல் ஆய்வுக்கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதிவந்தவர். இவரது ஆய்வுகளின் எதிர்வுகூறல்கள் பல நிகழ்கால தரிசனங்களான நிலையில் இவரது படைப்புக்கள் ஈழத்து அரசியல் அறிஞர்களால் கூர்ந்து நோக்கப்பட்டுவந்துள்ளன.