கலையரசன். சென்னை 600018: கிழக்கு பதிப்பகம், இல.33/15, எல்டாம்ஸ் சாலை, ஆள்வார்ப்பேட்டை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 600018: கிழக்கு பதிப்பகம், New Horizon Media Pvt Ltd., இல.33/15, எல்டாம்ஸ் சாலை, ஆள்வார்ப்பேட்டை).
190 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-8493-477-9.
இலங்கைத் தமிழரான கலையரசன், பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம்செய்து, அங்குள்ள அரசியல் சமூக நிலவரங்களை குறிப்பாக, வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளை ஆய்வுசெய்து கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறார். உலகளாவிய தமிழரின்- குறிப்பாக ஈழத்தமிழரின் அகதிவாழ்க்கை பற்றிக்கூறும் இந்நூலில் 5 பிரிவுகள் உள்ளன. பயணங்கள், சர்வதேச அகதி அரசியல், திரைகடலோடியும் புகலிடம் தேடு, சத்திய சோதனை, லண்டன் உங்களை வரவேற்கிறது ஆகிய தலைப்புகளில் 45 கட்டுரைகள் இந்நூலில் ஒழுங்கமைக்கப்பெற்றுள்ளன.