7190 பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்.

சி.விஜயகுமார். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2010. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

xiv, 182 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1857-83-2.

பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள் Macro and Micro Economic Theories    பற்றி இலங்கைத் தமிழரால் தமிழில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இது அமைகின்றது. நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டம்பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம் மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக் குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன.  அவற்றைப்பற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் இங்கு விளக்கியுள்ளார். கலப்புப் பொருளாதார அமைப்புகள் நடைமுறையில் இருந்துவரும் பின்னணியில் அரசின் பங்களிப்பு,  தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவை பற்றிய விமர்சன நோக்கிலான ஆசிரியரின் விளக்கம் நன்முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் எவ்வாறு கொள்நெறி வகுத்தல், அதன் இலக்குகளை எவ்விதம் அமைத்தல் என்பவற்றின் சிக்கல் நிலைகள் பற்றி ஆசிரியர் போதிய சிரத்தையுடன் நோக்கியுள்ளார். இந்நூலில் சேர்க்கப்பட்ட சூழலியல் ஒரு புதிய அணுகுமுறையினைத் தருவதுடன், பொருளியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அது முன்னிலைப்படுத்தப்பட்டுமுள்ளது.

ஏனைய பதிவுகள்