7191 பெரிய பிரித்தானியாவில் ஒரு நூற்றாண்டுக்காலப் பொருளாதார அபிவிருத்தி 1840-1940. 

ஜி.பி.ஜோன்ஸ், ஏ.ஜி.பூல். கொழும்பு 3:  கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

xiv, 428 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

A hundred years of economic development in Great Britain(1840-1940) என்ற ஆங்கில நூலின் நான்காவது பதிப்பின் தமிழாக்கம் இதுவாகும். 1840 முதல் 1940 வரையிலான நூற்றாண்டுக்கால பிரித்தானிய பொருளாதார வரலாற்றைக் கூறும் இந்நூல், மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. 1837-1875 காலகட்டத்தைக் குறிக்கும் முதலாம் பிரிவில், 1840க்கு முன்னிருந்த குடிசனத் தொகையும் வளங்களும், போக்குவரத்து, தபால்-தந்திச் சேவை என்பவற்றில் 50 வருடமாகஉண்டான முன்னேற்றம், தானியச் சட்டம் விலக்கப்பட்டதற்கு முன்பும் பின்புமுள்ள விவசாயம், ஆடைவகைகளின் உற்பத்தி, இரும்பு உருக்கு எந்திரத் தொழில்கள், கடன் வசதியும் வியாபார நிர்வாகமும், முதலாளி தொழிலாளி, அரசாங்கம் ஆகிய விடயங்களும் 1875-1914 காலகட்டத்தைக் குறிக்கும் இரண்டாம் பிரிவில்,  கைத்தொழில் வர்த்தக அமைப்பு, பிறநாட்டுப் போட்டியும் கைத்தொழிலில் ஏற்ற இறக்கமும், விவசாயமும் அதன் பிரச்சினைகளும், போக்குவரத்துகள், வங்கித் தொழிலும் பணச்சந்தையும், அரசாங்கமும் தொழிலாளரும் ஆகிய விடயங்களும், 1914-1939 காலகட்டத்தைக் குறிக்கும் மூன்றாம் பிரிவில்,  கைத்தொழிலும் வர்த்தகமும், கைத்தொழில் புனரமைப்பு, போருக்கு முன்னும் பின்னும் விவசாய நிலைமை, போக்குவரத்து சாதனங்கள்-பழையனவும் புதியனவும், பணவியல் சார்ந்த கொள்கை, 1914 தொடக்கமாகவுள்ள தொழில் நிலைமைகள் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

9404 க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அடிப்படை இலத்திரனியல்.

எஸ்.ரெஜினோல்ட் ஜெயக்குமார், எஸ்.நிமலன், பீ.ரவிராஜன்.  யாழ்ப்பாணம்: TPS Publishers அன்னை அகம், புலோலி தெற்கு, புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 6: ஈ.எஸ்.பிரின்டர்ஸ், 257/1E, காலி வீதி, வெள்ளவத்தை). vi, 184

Bingo Internet sites 5 Lb Put

Articles How to find A casino Which have 5 Euro Free No deposit Better British Casinos Lowest Deposit From 10 Offers With Incentive Gambino Harbors