7207 சனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான சட்டம்.

துசித்த அலுத்பட்டபெந்திகே. கொழும்பு 6: சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு, PAFFREL, 12/03, றொபர்ட் ரெரஸ், றொபர்ட் குணவர்த்தன மாவத்தை, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் அறியமுடியவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

சனாதிபதி தேர்தல் தொடர்பாக சாதாரண குடிமகன் அறிந்திருக்கவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய இந்நூலின் ஆசிரியர் ஒரு சட்டத்தரணியாவார். சனாதிபதி வேட்பாளராவதற்கான தகைமையீனங்கள், சனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்களித்தல், நியமனப்பத்திரம் ஒப்படைத்தல், வாக்கெடுப்பை ஆரம்பித்தல், வாக்கெடுப்பை நிறைவுசெய்தல், வாக்குகளை எண்ணுதல், வாக்கெடுப்பு நிலைய முகவர்கள், தேர்தல் தவறுகள்,  மோசடிச் செயல்கள், சட்டவிரோத செயல்கள், சனாதிபதித் தேர்தல் மனுக்கள், வாக்களிக்கச் செல்வதற்கான லீவு பெற்றுக்கொள்ளுதல் ஆகிய தலைப்புகளில் இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 599949).

ஏனைய பதிவுகள்