நா.மயில்வாகனம். கொழும்பு 3: நா.மயில்வாகனம், சென் தோமஸ் பாடசாலை, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
அரசின் புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய தரம் 6க்குரிய சுற்றாடற் கல்வி வழிகாட்டியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்பாடே புதிய பாடத்திட்டத்தில் முக்கியம் பெற்றுள்ளது. தகவல் தேடலில் மாணவர்களுக்கு உதவும்வகையில் வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.