ஆய்வு அபிவிருத்திக் கிளை. பத்தரமுல்ல: தேசிய மதிப்பீட்டிற்கும் பரீட்சித்தலுக்குமான சேவை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, 1வது பதிப்பு, மே 2008. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(10), 187 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
இந்த அறிவுரைப்புக் கையேட்டின் பகுதி 1இல் பரீட்சை தொடர்பான பொது அறிவுறுத்தல்களும் பகுதி 2இல் ஒவ்வொரு பாட வினாத்தாளின் அமைப்பும் தன்மையும் பகுதி 3இல் ஒவ்வொரு பாடத்தின் வினாத்தாள்களிலும் உள்ளடங்கும் பல்வேறு வகையான வினாக்களுக்கான மாதிரி வினாக்களும் அடங்கியுள்ளன. இங்கு பல்வேறு வகை வினாக்களில் சில மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் 2008ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் வினாத்தாள்கள் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நூல் உலக வங்கியின் கல்வித்துறை அபிவிருத்தி கொடையின் ESDG பணிக்குழுவின் நன்கொடையில் வெளியிடப்பட்டது.