ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).
iv, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இறைவனின் படைப்பில் முக்கிய பங்காகச் செயற்படும் குடும்பம் என்னும் அமைப்பைக் குறித்துப் பல்வேறு கோணங்களில் தான் சார்ந்த கிறிஸ்தவ இறையியல் பார்வையில் கருத்துக்களை ஆசிரியர் முன்வைக்கிறார். யார் யாருக்காக சிருஷ்டிக்கப்பட்டார்? பெண்கள் ஆண்களுடன் ஒன்றாக ஆளும் கட்சியினரா இல்லை எதிர்க்கட்சியினரா? பெண்கள் ஆண்களைவிட பலவீனமானவரா? முற்காலத்தில் பெண்கள் தரக்குறைவாகக் கணிக்கப்பட்டதேன்? இக்காலத்தில் பெண்கள் சர்வ சமத்துவம் கோருவது சரியா? இறைவன் தம்மைப் பெண்கள் அணுக இடமளித்தாரா அல்லது விலக்கிவைத்தாரா? இக்காலத்துப் பெண்களின் தகுதிகள் எவை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமையும் இந்நூல் கணவன் மனைவியரிடையே ஒருவருக்கு ஏற்படும் புகழ்ச்சி அடுத்தவருக்கு எற்படும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றும் கணவன் மனைவி இருவரும் தம்மை எதிரெதிர் கட்சிகளில் இருத்திக்கொள்ளாமல் ஒரே கட்சியில்-ஆளும் கட்சியில் இருத்திக்கொள்ளவேண்டும் என்றும் அதுவே குடும்பம் இனிதாக அமைய வழி என்றும் அறிவுரை நல்குகின்றது.