சபா ஜெயராசா. யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர்).
(6), 110 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
ஈழநாட்டின் கலைச்செல்வங்களில் சிறப்புப்பெற்று விளங்கும் கிராமிய நடனங்களை முதியோர் வாயிலாகக் கேட்டும், கள ஆய்வுகள் செய்தும் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது கிராமிய நடனங்களைiயும் அவற்றோடு தொடர்புடைய பண்பாட்டு பரிமாணங்களையும் அறிவுக் கையளிப்பினையும் நூலாசிரியர் தெளிவாகத் தொகுத்துள்ளார். உலகப் பாரம்பரியத்தில் தொன்மையான நடனங்களும் நடனக் கல்வியும், தமிழர் பாரம்பரிய நடனக் கோட்பாடுகள், கரக நடனம், காவடி நடனம், கும்மி நடனம், குதிரையாட்டம், கோலாட்டமும் கழியாட்டமும், ஏந்தல் நடனங்கள், ஆலாபரண நடனம், உருவேறிய நடனம், முகமூடி நடனங்கள், தொழில்சார் நடனங்கள், கிராமியக் கூத்துக்கள், பாவைக் கூத்துக்கள், நாட்டார் கலைக் கோட்பாடுகள் ஆகிய 15 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 137559).