ந.வேல்முருகு. யாழ்ப்பாணம்: வாசகர் பதிப்பகம், 857, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1993. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டு கொடல்ல வீதி).
viii, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் சமூக புவியியல் என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர் சமர்ப்பித்த ஒரு ஆய்வேட்டின் ஒரு இயல் இங்கு நூலுருவாக்கப்பட்டுள்ளது. 1981இல் மலையக மக்கள் வாழ்ந்த முழுப் பிரதேசமும் (பதினொரு மாவட்டங்கள்) இவ்வாய்வில் உள்ளடங்குகின்றன. உயர்நிலப் பிரதேசம், இடைநிலப் பிரதேசம், தாழ்நிலப் பிரதேசம் என்ற மூன்று பிரிவுகளில் இடம்பெறும் இவ்வாய்வில் கொவரகல, கிறேக், கோடன், டன்சினானே, வோல்ரிம், லக்சபான, ஆகிய உயர்நிலப் பிரதேசத் தோட்டங்களும், வலபொட, கவுபே, பானாவத்தை, கிறேகெட், டெல்ரா, பிற்றகந்த ஆகிய இடைநிலப் பிரதேசங்களும், ஆண்டபன, பெந்தொட்டை, அம்பத்தென, முவன்கந்த, செவகந்த, நோத் மாத்தளை, ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 466056).