ஈழவாணி (இயற்பெயர்: அன்ரனி வாணி ஜெயா). வவுனியா: சூரியன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, மார்ச் 2006. (வவுனியா: கலைமகள் அச்சகம்).
xxvi, 287 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 20×14.5 சமீ.
முதியோர் வாயிலிருந்து பெற்ற பாடல்கள், அவர்கள் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த பாடல்கள், நாட்டார் பாடல் தொகுதிகளிலிருந்து பெற்ற பாடல்கள் என இத்தொகுப்பில் பரவலாக இந்நூலாசிரியர் இடம்பெறச் செய்துள்ளார். நாட்டார் வழக்காற்றியல், இலக்கியங்களில் நாட்டார் பாடல்களின் தாக்கம், மட்டக்களப்பில் நாட்டார் பாடல்கள், மலையக நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பருவப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள் (மலைநாட்டுத் தொழிற்பாடல்கள், வேளாண்மைப் பாடல்கள்), பள்ளு (கதிரைமலைப் பள்ளு, பண்டிப் பள்ளு, குருவிப் பள்ளு), சிந்து, கதைப்பாடல், கடற்தொழில் பாடல்கள், காதல் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், பறங்கிப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் ஆகிய 17 தலைப்புகளில் விரிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஈழவாணி இலக்கிய ஈடுபாடு மிக்கவர். நிறங்கள் சிறுகதைத் தொகுப்பையும், சிதறல் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டவர். செந்தணல் செய்திப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 608237).