7244 மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்.

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). இலங்கை: தமிழ் நாடகக் குழு வெளியீடு, இலங்கை கலைக்கழகம், 2வது பதிப்பு, கார்த்திகை 1962, 1வது பதிப்பு, 1960. (கண்டி: ரோயல் அச்சகம், 190 கொழும்பு வீதி).

82 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் இலங்கைக் கலைக்கழகத் தலைவராக இருந்த வேளையில்  ஈழத்தின் பலபகுதிகளைச் சேர்ந்த நாட்டார் பாடல்களைத் தொகுப்பதிலே ஈடுபட்டிருந்தார். பாமர மக்களின் உணர்ச்சிக் கவிவளமுள்ள பாடல்களை காலவெள்ளத்தில் அழிந்துவிடாது பாதுகாக்கும் நோக்கில் அவர் தேடித்தொகுத்தவை இவை. இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழுவின் 4ஆவது வெளியீடாக இது வெளிவந்துள்ளது. காதலன், காதலி, தோழி, தாயார் ஆகியோரின் கூற்றாய் உள்ள கவிகள், பொதுப்பாடல்கள், பொலிப்பாட்டு, ஏர்ப்பாட்டு ஆகிய இரு பிரிவுகளில் அமைந்த தொழில்முறைப்பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள் ஆகிய பிரிவுகளில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 169320).

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்.

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 3வது பதிப்பு, கார்த்திகை 2021, 1வது பதிப்பு, 1960, 2வது பதிப்பு, கார்த்திகை 1962. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxiv, 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

இந்நூலில் “கவிகள்” (காதலன் கூற்றாய் உள்ளவை 22 பாடல்கள், காதலி கூற்றாய் உள்ளவை 23-38 பாடல்கள், தோழி கூற்றாய் உள்ளவை 38-43 பாடல்கள், தாயார் கூற்றாய் உள்ளவை 44-46 பாடல்கள்), “பொதுப்பாடல்கள்” 47-56 பாடல்கள், “தொழில்முறைப் பாடல்கள்” (பொலிப் பாட்டு 57-62, ஏர்ப் பாட்டு 63-64 பாடல்கள்), “கொம்பு விளையாட்டுப் பாடல்கள்” 65-68 பாடல்கள் என மொத்தம் 68 பாடல்களை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் தேடித் தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Aparelho Do Porquinho Que Ganha Bagarote

Content Melhores Sites Para Jogar Arruíi Acabamento Abrasado Porquinho: Online Free Bet Blackjack Dealer Giros Acostumado Halloween Fortune Saiba Aquele Apostar Briga Busca Destarte aquele