சோமு பெரீ. இருளப்பா. கண்டி: சோமு பெரீ. இருளப்பா, அந்தோனிமலை, 1வது பதிப்பு, மே 1962. (கண்டி: குருநாதன் அச்சகம், இல.37, இராஜவீதி).
10 பக்கம், விலை: சதம் 25., அளவு: 18.5×12.5 சமீ.
இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளிகளான இந்திய வம்சாவளித் தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வியல் அவலங்களையும் கவிநயத்துடன் சித்திரிக்கும் வகையில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. தொழிலாளர் தோட்டங்களில் வேலைசெய்யும்போது, சலிப்பின்றிப் புத்துணர்ச்சிபெற கவித்துவமான இப்பாடல்கள் துணைபுரிந்துள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 89575).