ஆ.தா.ஆறுமுகம். நியூசிலாந்து: A.T.Arumugam, 101, Epuni Street, Lower Hutt, 1வது பதிப்பு, ஆனி 2011. (கொழும்பு 13: தேவி அச்சகம்).
vi, 80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ.
மனக்கணிதம் என்பது தமிழரின் நாட்டாரிலக்கியத்தில் நொடிகள் – விடுகதைகள் போன்று கடதாசி, எழுதுகோல் உதவியின்றி மனதிற் கணித்தே புத்திசாதுரியமாக விடைகாணும் செயல்முறையாகும். இந்நூல் அத்தகைய மனக்கணக்குகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ஆங்கிலம் கற்ற பன்னாட்டாரிடையே வழங்கும் கணக்குகளையும் மூளைக்கு விருந்தளிக்கும் புதிய ஆக்கங்களையும் உள்ளடக்கியது. நூலாசிரியர், யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்து தெல்லிப்பழையில் வளர்ந்து இளவாலையில் திருமணஞ்செய்தவர். தற்போது நியூசிலாந்தில் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்கின்றார். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து அதிபராகப் பணியுயர்வு பெற்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இறுதியாகப் பணியாற்றிய வேளை ஓய்வுபெற்றவர்.