7256 சிதறிய முத்துக்கள்: பொன்மொழிகளின் திரட்டு.

எஸ்.ராமன். (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: எஸ்.இராமன், 92 பேங்ஷால் வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2005. (கொழும்பு 13: யு.கே.பிரின்டர்ஸ், 103, விவேகானந்தா மேடு).

vi, 130 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×13 சமீ., ISBN: 955-99273-0-2.

இப்தார்க், ரஸ்கின், கீட்ஸ், கதே, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களின் 1000  வரையிலான பொன்மொழிகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட நூல் இது. டொமினிக் ஜீவாவின் முன்னுரையுடன் கூடியது. உலகப் பெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்களை-பொன்மொழிகளாக ஒன்றுதிரட்டித் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு அறிவுதரும் பயனுள்ள நூல். கொழும்பின் Golden Café நிறுவனத்தின் உரிமையாளரான நூலாசிரியர் சங்கரநாராயண ரெட்டியார் ராமன், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் மூலைக்கரைப்பட்டியிலிருந்து  1948இல் தனது ஒன்பதாவது வயதில் கொழும்பில் வந்து குடியேறியவர். ஈழத்துத் தமிழ் பதிப்புலகில் அதீத ஈடுபாடு கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

12525 – மஹாளய சிராத்தம்.

நீர்வேலி தி. நடனசபாபதி சர்மா. ஜேர்மனி: ஸாயிநாதம், போகும், 1வது பதிப்பு, 1998. (Germany: Sainatham, Bochumerstr -138, 44866 Bochum)-138, 44866 Bochum). x, (2+10), 91 பக்கம், விலை: ரூபா 150.,