சதாசிவம் சச்சிதானந்தம். France: Ecole de Tamoul-Gnana, Institut International des, Etudes Superieures, 70 Rue Philipe de Girard, 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
393 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 2-9510122-9-2.
மற்றெல்லா மொழிகளினதும்போல, பிரெஞ்சு மொழியின் இயக்கத்திற்கு அடிப்படையான வினைச்சொற்களின் இலக்கணம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. உச்சரிப்பு, வினை இலக்கணம், வாக்கியம், வினைத்திரிபு அட்டவணைகள், வினை அகராதி ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆகியவற்றின் தொலைதூரக் கல்வித்துறையின் ஐரோப்பிய இயக்குநராகவுள்ளார். பாரிசில் முதலாவது தமிழ்ப் பள்ளியை 1983இல் நிறுவிய இவர் 2000ம் ஆண்டில் தமிழ்வழி பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தவராவார்.