7265 தமிழ் மொழி விளக்கக் கைந்நூல்.

சோமசுந்தரம் முரளி. கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).

xii, 304 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-276-4.

இந்நூல் ஆரம்ப வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கற்கும் மாணவர்களது தமிழ்மொழித் திறன் விருத்திக்கு உதவக்கூடியது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கே பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மொழிவிருத்திக் கைந்நூல். இலக்கணச் சிந்தனையை மையப்படுத்தி, தற்காலத் தமிழ் இலக்கணத்தை-பிரயோக இலக்கணத்தை முதன்மைப்படுத்தியதாக நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக்கொண்ட முரளி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர்.  தற்போது மேல்மாகாணத்தில் பிலியந்தலைக் கல்வி வலயத்தில் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்