சுவாமி ஞானப்பிரகாசர். திருப்பனந்தாள்: ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகள், ஸ்ரீ காசிமடத்துத் தலைவர், 1வது பதிப்பு, 1932. (யாழ்ப்பாணம்: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
viii, 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி.
சுவாமி ஞானப்பிரகாசர். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, 3வது பதிப்பு, 2008, 2வது பதிப்பு, 1999, 1வது (மூலப்) பதிப்பு, 1932. (சென்னை 600005: லோகா ஓப்செட் பிரின்டர்ஸ், 66/1, இரசப்பா தெரு, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி).
123 பக்கம், விலை: இந்திய ரூபா 45.00, அளவு: 21×14 சமீ. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சி சம்பந்தமாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் (Studies in Tamil Etymology) எழுதப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களெல்லாம் ஒரு சிறு தொகையான அடிகளினின்றும் பிறந்திருத்தலையும் அவ்வடிச் சொற்களே வடமொழியாதிய வேறு அநேக மொழிகட்கும் தாதுக்களாய் நிற்றலையும் விளக்குவதாக இக்கட்டுரைகள் அமைந்திருந்தன. சுவாமி ஞானப்பிரகாசர் தயாரித்துவந்த தமிழ்ச் சொற்பிறப்பு அகராதி நூலுக்கான முன்னுரையாக அமையும் வகையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிச்சொல் இயல்பு, வழிச்சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, அரிய மொழிகளில் வழிச்சொல்லாக்கம் ஆகியஆறு இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 101364).