கே.கண்ணன். கொழும்பு 6: Sai Educational Publications, 155/2 Canal Road, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 6: SDS கொம்பியூட்டர் சேர்விஸ், 30யு, 33ஆவது ஒழுங்கை).
(6), 194 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 24.5×18 சமீ.
1999ஆம் ஆண்டு இலங்கை தேசியக் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைய தரப்படுத்தப்பட்ட பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கிய நூல். புதிய கல்வி மறுசீரமைப்பில் தரம் 9இல் புகுத்தப்பட்டுள்ள பாடத்திட்டம் முழுவதையும் மீட்கும் விதத்தில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகிலும் குறித்த பாட அலகுக்கான விடயதானங்கள் அநேக ஒழுங்குபடுத்தப்பட்ட உதாரணக் கணக்குகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.