7373 மருத்துவக் களஞ்சியம்.

சிவ. தியாகராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (சென்னை: பி.எஸ்.முத்து கிராப்பிக்ஸ்).

608 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 450., அளவு: 25×19 சமீ., ISBN: 978-81-908681-8-1.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டுவன் கிராமத்தில் பிறந்தவர் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா. கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கற்றுத்தேர்ந்து இலங்கையிலும், பின்னர் புலம்பெயர்ந்து லண்டனிலும் வைத்தியராகவும், பிரபல தொல்லியல் ஆய்வாளராகவும், பன்னூலாசிரியராகவும், தமிழர்களிடையே பிரபல்யம் பெற்றவர். உயிரியல், ஆங்கில மருத்துவவியல், அறுவைச் சிகிச்சையியல், மகப்பேற்று மருத்துவம், மனநோயியல் ஆகிய துறைகளில் பெற்ற அனுபவத்தையும் பயிற்சியையும் உறுதுணையாகக்கொண்டு நவீன விஞ்ஞான மருத்துவத்தின் முக்கியமான பகுதிகளைத் தான் தமிழில் கூறவேண்டும் என்னும் அவாவினால் இப்பாரிய மருத்துவ நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆரோக்கிய வாழ்வு, இருதய, இரத்தக் குழாய் நோய்கள், நுரையீரல் நோய்கள், செரிமான மண்டல நோய்கள், நீரிழிவு நோய், கல்லீரல் நோய்களும் கணைய அழற்சியும், சிறுநீரக நோய்கள், புரோஸ்ரேற் (சுக்கிச் சுரப்பி) நோய்கள், முடக்குவாதவியலும் எலும்பு நோய்களும், மூளை நோய்களும் மனநலக் குறைவும், கண், காது, மூக்கு, தொண்டை நோய்கள், மகளிர் மருத்துவம், மகப்பேற்றியல், குடும்ப ஆரோக்கியம் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

4 Reel Kings Slot

Content Prós Como Contras Esfogíteado Acabamento De Cassino Jewels Esfogíteado Joker – Jogue attila slot online sem download E Aprestar Acrescentar Bit Of Bonus Action

Medusa Ii På Slotspil

Content 50 GRATIS SPINS flowers Ved registrering Ingen depositum | Hasardspil Afkastning Blive 10 Før Bedste Tilslutte Spillemaskiner Foran Danske Spillere Gratis Slots Sammenlignet Inklusive