ரதிராணி யோகேந்திரராஜா. கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).
xii, 435 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-245-0.
இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்களும் முகாமையின் அடிப்படைகளையும், முகாமைக் கோட்பாடுகளையும் கொண்டிருக்க, அடுத்த எட்டு அத்தியாயங்களும் தீர்மானமெடுத்தல், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், திணைக்களப்படுத்தல், ஊழியரிடல், தலைமைத்துவம், தொடர்பாடல், ஊக்கப்படுத்தல், கட்டுப்படுத்தல் ஆகிய முகாமைக் கருமங்களை உள்ளடக்கியுள்ளன. இறுதியாக விடய ஆய்வுப் பகுப்பாய்வு தொடர்பான அம்சங்கள் உதாரண விளக்கத்துடன் உள்ளடக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். ரதிதேவி யோகேந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிகபீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.