எஸ்.நடராஜா. மானிப்பாய்: எஸ். நடராஜா, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
85 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 18×12.5 சமீ.
சித்திர ஆசிரியர் எஸ்.நடராஜா (எஸ்.என்.ஆர்.) அவர்கள் 1957இல் கல்வித் திணைக்களத்தின் சித்திர ஆசிரியர் பதவியில் இணைந்துகொண்டவர். ஓவியம், கலை, கைப்பணி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை சித்திர ஆசிரியர் தராதரப் பத்திரத்தையும், சென்னை இந்தியா, கலை, கைப் பணி ஆசிரியர் தராதரப் பத்திரத்தையும் உடையவர். அவர் தன்னிடமுள்ள கலை ஆர்வத்தைக் கடின உழைப்புடனும், உற்சாகத்துடனும், விடா முயற்சியுடனும், இலகுவில் மாணவர்களுக்குப் புகட்டுவதில் வல்லவராய் இருந்தார். பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய சித்திர விளக்கங்களை இந்நூல்வழியாக தெளிவாக வழங்கியுள்ளார். எப்படி வரைவது என்ற இந்நூல் மகிமை, வரைவதற்குத் தேவையானவை, நிலை – சாதனம், சிறு பிள்ளைகள், இப்படியும் வரையலாம், அறிவு, பாடசாலைகளில் சித்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சித்திரம், இதுவும் ஒரு முறை, அலங்காரம், பொருள் சித்திரம், உயிரோவியச் சித்திரம், இதுவும் ஒரு வழி, உருவம் செய்தல், சித்திர ஆசிரியர், பொது, குறிப்பு, கலை ஆகிய பதினெட்டு பாடத்தலைப்புகளின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.