7391 இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள்: உருவாக்கமும் உருவாக்கியவர்களும்.

செல்லையா கிருஷ்ணராசா (தொகுப்பாசிரியர்). சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி  7வது தெரு, வட பழநி, இணை வெளியீட்டாளர்,  யாழ்ப்பாணம்: பிறைநிலா வெளியீடு, 2ம் கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு, 1வது பதிப்பு, புரட்டாதி 2008. (சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி  7வது தெரு, வட பழநி).

396 பக்கம், 106 வண்ணத் தகடுகள், விலை: ரூபா 4500., அளவு: 29×21.5 சமீ., ISBN: 978-955-659-151-4.

இலங்கையிலே இதுவரை கிடைத்த செம்பு, வெண்கலப் படிமங்கள் பற்றிய 11 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். பேராசிரியர் கா.இந்திரபாலா எழுதியதும் இதுவரை வெளிவராததுமான இலங்கையில் கிடைத்த சிவனின் உலோகச் சிலைகள் என்ற கட்டுரையுடன் ஆரம்பிக்கும் இத்தொகுப்பில்  பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா எழுதிய இலங்கையில் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள், கந்தரோடையில் கிடைத்த இந்து வெண்கல உலோகச் சிலைகள், இலங்கை இந்து வெண்கலச் சிற்பக்கலை மரபினூடாக அறியப்படும் ஆபரணக்கலை மரபு, பொலனறுவைக்கால சைவநாயன்மார் வெண்கலப்படிமங்கள் காட்டும் ஈழத்து வார்வைக்கலை மரபு, இலங்கையில் இந்து வெண்கலப்படிமக்கலை மரபுகள்: உருவாக்கமும் உருவாக்கியவர்களும்- கி.பி.09-12 நூற்றாண்டு, ஆகிய ஐந்து ஆய்வுக்கட்டுரைகளும்,பேராசிரியர் செ.கிருஷ்ணராஜாவின் வழிகாட்டலில் செல்வி ராகினி சிதம்பரப்பிள்ளை 1995இல் தன் பட்டப்படிப்புத் தேவைக்காக எழுதிய இலங்கையில் கிடைத்த பார்வதி வெண்கலப் படிமங்கள் என்ற ஆய்வுக்கட்டுரையும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய ஈழத்து நடராசர் செப்புத் திருமேனிகள் என்ற கட்டுரையும், கலாநிதி W.பாலேந்திரா ஆங்கிலத்தில் எழுதி 1953இல் Tamil Culture சஞ்சிகையில் பிரசுரமாகிப் பின்னர் குல சபாநாதன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட திருகோணமலைத் திருவுருவங்கள் என்ற கட்டுரையும், வாழ்நாட் பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய இலங்கையில் வெண்கலப் படிமங்கள்: பொலனறுவைக் காலம் என்ற கட்டுரையும், இலங்கையின் முன்னாள் அரும்பொருளகக் காப்பாளர் கலாநிதி ஸ்ரீமல் லக்துசிங்க எழுதிய ஸ்ரீலங்காவில் இந்து சிற்பங்கள் என்ற ஆய்வுக்கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் அனைத்துக்கும் பொருத்தமான வண்ணப்படங்கள் செழுமைசேர்க்கின்றன.

ஏனைய பதிவுகள்