கலாகேசரி ஆ.தம்பித்துரை. தெல்லிப்பழை: கலாகேசரி கலாலயம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, மே 1982. (சுன்னாகம்: திருமகள் பதிப்பகம்).
viii, 64 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 10.50, அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவர்ச் சித்திரங்கள் என்ற தலைப்பில் மல்லிகை மாத இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் விரிவான ஆய்வு வடிவம் இதுவாகும். மறையும் நிலையிலிருந்த பாரம்பரிய முறையில் தீட்டப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவரோவியங்களைப்பற்றிய பதிவாக இந்நூல் அமைகின்றது. சுமார் 75-150 ஆண்டு கால இடைவெளிக்குள் தீட்டப்பெற்றவை இவை என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், யாழ்ப்பாணம் சட்டநாதர் ஆலயம், யாழ்ப்பாணம் பாங்செல் வீதி கிட்டங்கி, காங்கேசன்துறை கிட்டங்கி, ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்களின் புகைப்பட வடிவமும் தகடுகளாகத் தரப்பட்டுள்ளன. இன்று இந்நூலில் குறிப்பிட்ட பல சுவரோவியங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பது மனதை நெருடும் செய்தியாகும். நூலாசிரியரின் 50ஆவது பிறந்ததின வெளியீடாக வெளிவந்த நூல் இதுவாகும்.