இராஜம் புஷ்பவனம். கொழும்பு 6: என்.ஆனந்தரஜனி, Hotel Ceylon Inn 501, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
viii, 40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18×12.5 சமீ.
இசையோடிணைந்த தமிழரின் வாழ்வில் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான வில்லிசை தனித்துவம் மிக்கது. வில்லிசை நேரடியானதொரு கிராமியக் கலைவடிவம். புராணக் கதைகளையும், சிக்கலான தத்துவக் கருத்துக்களையும் பாமரமக்களும் புரிந்துகொள்ள எளியமுறையில் இசையோடு கலந்து வழங்குவது வில்லுப்பாட்டின் தனித்துவமாகும். இத்தகைய சிறப்புமிக்க தமிழ்க் கலைவடிவம் பற்றி இந்நூல் விரிவாக விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11102).